சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2493

பல என்று துணிந்தவழித் துணியும்முன் ஒருகால் ஒன்று கொல்லோ என்றும்
ஐயம் சென்றமையின் ஒன்று அன்று என அதனை மறுத்துப் பல என்றும்,

அன்மைச் சொல்லானது மறுக்கப்படும் பொருள்மேல் ஒருபொருள் ஒருபொருள்
அன்றாம் தன்மையைச் சுட்டி நின்றவாறும்,

மகன் என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் மகன்கொல்லோ என்றும்
ஐயம் சென்றமையின் குற்றி அல்லன் என அதனைத்தழீஇக் கொண்டு மகன் என்றும்,

குற்றி என்று துணிந்தவழித் துணியும்முன் ஒருகால் குற்றி கொல்லோ என்றும்
ஐயம் சென்றமையின் மகன் அன்று என அதனைத் தழீஇக் கொண்டு குற்றி என்றும்,

ஆண்மகன் என்று துணிந்த வழித் துணியும்முன் ஒரு கால் ஆண்மகன்
கொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் பெண்டாட்டி அல்லன் என அதனைத்
தழீஇக்கொண்டு ஆண் மகன் என்றும்,

பெண்டாட்டி என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் பெண்டாட்டி
கொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் ஆண்மகன் அல்லள் என அதனைத்
தழீஇக்கொண்டு பெண்டாட்டி என்றும்,

ஒன்று என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் ஒன்று கொல்லோ என்றும்
ஐயம் சென்றமையின் பலஅன்று என அதனைத்தழீஇக் கொண்டு ஒன்று என்றும்,

பல என்று துணிந்தவழித் துணியும்முன் ஒருகால் பல கொல்லோ என்றும் ஐயம்
சென்றமையின் ஒன்றுஅல்ல என அதனைத்தழீஇக்கொண்டு பல என்றும்,