சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2497

ஆண்மகன் கொல்லோ பெண்மகள் கொல்லோ என்ற உயர்திணைப்பால்
ஐயத்தின்கண் ‘தோன்றுவார்’ என்ற பன்மைச் சொல்லும், பால்துணிந்து பன்மை ஒருமை
துணியப்பெறாத ஒருவன்கொல்லோ- பலர்கொல்லோ ஒருத்தி கொல்லோ-
பலர்கொல்லோ- என்ற பால் ஐயத்துக்கண்ணும் அத்தகைய பன்மைச்சொல்லும் வரும்
என்பர் இவ்வாசிரியர். இவர் கருத்துச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்ற இருவர்
கருத்தினையும் ஒட்டியதே.

உரையாசிரியரும் தெய்வச்சிலையாரும் நன்னூல் உரைகாரர்களும் உயர்திணைப்
பன்மைச் சொல்லை ஆண்மை பெண்மை துணியப் பெறாத உயர்திணைப்பால் ஐயம்
ஒன்றற்கே கொண்டனர். திணையொடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மை
ஒருமைப்பாலையத்துக்கு அவர்கள் தம் உரைகளில் வாய்ப்பே தரவில்லை,

அஃறிணைக்கண் பன்மை ஒருமை துணியப்பெறாத ஒன்று கொல்லோ
பலகொல்லோ என்ற ஐயத்துக்கண் ‘செய்புக்கன’ முதலிய அஃறிணைப் பன்மைச்
சொல்லானும், ‘செய்புக்கபெற்றம்’ முதலிய பால்பகா அஃறிணைப் படர்க்கைச்
சொல்லானும் சொல்லுக என்றார் இவ்வாசிரியர்.

நச்சினார்க்கினியரும் உரையாசிரியரும் அஃறிணைப் பன்மை ஒருமைப்பால்
ஐயத்துக்கண் ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம் என்றாற்போன்ற
பால்பகா அஃறிணைப்படர்க்கைச் சொல்லையே கொண்டனர். தெய்வச்சிலையார் தம்
உரையில் இப்பால் ஐயத்துக்கே இடம்தரவில்லை. ‘ஒன்றோ பலவோ செய்புக்கது-
புக்கன’ எனப் பால் காட்டும் சொல்லால் சொல்லுதல் அமைக்கத்தகாத வழுவாம்
என்பதனை உட்கொண்டு, உரையாசிரியரும், நச்சினார்க்கினி யாரும்