சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

498 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கொண்டதுபோலவே பால்பகா அஃறிணைப்படார்க்கைச் சொல்லையே நன்னூல்
உரையாசிரியர்கள் அஃறிணைப் பன்மைஒருமைப்பால் ஐயத்துக்கு முடியாகக்
கொண்டனர். நேமிநாத நூலார் கொள்கையும் அது.

இனிச் சேனாவரையர் ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க உருபு,
செய்புக்கன, செய்புக்கபெற்றம் என்ற மூவகை முடிபையும் குறிப்பிட்டுள்ளார்.

இனி, முத்துவீரிய நூலார் உருபு என்ற சொல்லையே ஆண்மகன்கொல்லோ
பெண்மகள்கொல்லோ இஃதோ தோன்றும் உருபு, ஒன்றோ பலவோ செய்புக்க உருபு
என இரு இருதிணைப் பாலையத்துக்கும் கொண்டார்.

இவற்றை நோக்க, இவ்வாசிரியர் ‘பன்மை’ என்ற சொல்லை உயர்திணை
அஃறிணை என்ற இரண்டற்கும் கொள்ளாது, பன்மையை உயர்திணைக்கும் பிரிப்பு
ஒன்றனையே அஃறிணைக்கும்கொண்டு, நச்சினார்க்கினியர் உரைத்தனவற்றையே
கூறியிருப்பின் வழக்கிற்கு மிகவும் ஏற்றதாயிருந்திருக்கும். ஆண்பால் பெண்பால்
உணரப்படாத நிலையில் எந்த ஒருபாற்சொல்லாலும் குறிப்பிடுவது வழுவாம் என்ற
இடத்து ‘ஆண்மகன் கொல்லோ பெண்மகள்கொல்லோ இதோ தோன்றுவார்’ என்று
குறிப்பிடுவது வழுவமைதியாகக் கொள்ளத்தகும். அஃறிணைக்கு இருபாற்கும்
பொதுவாகிய பால்பகா அஃறிணைப்படர்க்கைப் பெயர் இருக்கவும். அதன்கண் உள்ள
ஒருமைப்பால் பன்மைப்பால்பற்றி ஐயம் தோன்றுமிடத்து ‘ஒன்றோ பலவோ செய்புக்கது
என்னோ புக்கன் என்றோ ஒருபாற்கே உரிய சொல்லாற் கூறும் வழு அமைக்கத்தக்கது
அன்று என்பதும், இருபாற்கும் உரிய பொதுச்சொல்லால் கூறுவதே ஏற்றது என்பதும்
அறிக.

இனித் துணியும் வழி இறுக்கும் விடையை இரண்டு வகையானும் கூறலாம்
என்பார் இவ்வாசிரியர். குற்றி கொல்லோ மகன்கொல்லோ என்று ஐயம் நிகழ்ந்தவழி,