சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா- 15

என்றும், சொல்லை நித்தியம் என்றும், விபு என்றும், திரவியம் என்றும் சத்தநூலார் கூறுவர். அர்த்தநாரீசுவரன் என்னும் பார்வதிபரமேசுவரன் போலே பொருளும் சொல்லும் பேதாபேதமாய் வரும் என்பாரும் உளர். காளிதாசனும் ‘வாகர்த்தா விவ’ என்னும் சுலோகத்தால் அவ்வாறு கூறுவன். உரிச்சொல்லாவது பொருளைக்காரணமாய் நின்று உணர்த்துவதற்குரிய சொல் அன்றோ எனின்,
 
 ‘பொருண்மை தெரிதலு சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும்’ (தொல்.சொல்.156)எனக் காரணமாகவும்

 

 
 ‘கொடைஎதிர் கிளவி’(99)எனச் சம்பிரதானமாகவும், 

 
 ‘முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்’

(419)
என அதிகரணமாகவும்,
 
 ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்’
‘ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்’
‘முதலறி கிளவி’, ‘சினையறி கிளவி’
‘அம்ம கேட்பிக்கும்’
எனக் கருத்தாவாகவும் சொல்லைக் கூறுவர். அவையெல்லாம் உபசாரம் என்க.
(316)
(2)
(114)
(276)
 
 ‘கம நிறைந்து இயலும்’
‘உருஉட் காகும்’
‘செல்லல் இன்னல் இன்னா மையே’
‘எல்லே விளக்கம்’
கொல்லே ஐயம்
(355)
(300)
(302)
(269)
(268)
எச்சொல்லும் பொருளும் பேதமின்றி அபேதமாய்க் கூறுதலின், தொல்காப்பியனார்க்கும்
அதுவே கருத்தென்க.