சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2, 3503

  ‘பால்மயக் குற்ற ஐயக் கிளவி
தான்அறி பொருள்வயின் பன்மை கூறல்.’
தொல்.சொல்.23

 
  ‘உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை.’
24

 
  ‘தன்மை சுட்டலும் உரித்தென மொழிப
அன்மைக் கிளவி வேறிடத் தான’
25

 
  ‘ஐயம் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியான் ஈண்டுரைக்க- மெய்திரிந்தால்
அன்மை துணி பொருள்மேல் வைக்க-’
நே.சொல்.8

 
  ‘ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள்மேல் அன்மையும் விளம்புப.’
நன்.376

 
  ‘ஐயம் திணைபால் அணையும் பொதுவே.’
‘ஐயமாம் இருதிணை அகத்தும் உருபைச்
செப்பினும் என்மனார் தெளிந்திசி னோரே.’
தொ.வி.128

மு.வீ.ஒ.60

 
  ‘ஐயுற் றுத்துணி தரும்வழி அன்மைத்
தன்மையைச் சுட்டலும் உரிய ஆகும்.’
‘திணைதுணிந் தனபால் துணியப் படாத
ஐயக் கிளவி அவ்வப் பொருள்வயின்
பன்மை கூறல் என்மனார் புலவர்.’
61


59

 

திணைவழுக்காத்தல் (297,298)்
 

297. உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்
அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின.
 

 

இது திணைவழுக் காக்கின்றது.

இ-ள்: யாதானும் ஓர் இயைபு பற்றி உயர்திணையொடு தொடர்ந்து நின்ற பொருள்
முதலிய ஆறும் அவ்வியை பினான் அவ்வுயர்திணையொடு ஒன்றுபடுத்தி முடிக்குங்கால்
அவ்வுயர்திணை முடிபினை உடையவாய் முடியும் என்றவாறு.