சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

504 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எனவே வேறுபடுத்தி முடிக்குங்கால் தமக்கு உரிய அஃறிணை முடிபானே முடியும் என்பதாயிற்று.
 

  எ-டு நம்பி பொன் பெரியன்
நம்பி இல்லம் பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நங்கை மூக்கு நல்லள்
நங்கை நிறம் கரியள்
நங்கை கவவுக் கடியள்
 

 
என முறையே பொருள் முதலிய ஆறும் உயர்திணை முடிபான் முடிந்தவாறு காண்க.

இனித் தமக்கு உரிய அஃறிணை முடிபான் முடியுமாறு:
 

  நம்பிக்குப் பொன் பெரிது
நம்பிக்கு இல்லம் பெரிது
நம்பிக்கு வாழ்நாள் பெரிது
நங்கைக்கு மூக்கு நன்று
நங்கைக்கு நிறம் கரிது
நங்கைக்குக் கவவுக் கடிது
என வரும். பிறவும் அன்ன.
 

 

பொருள் முதல் ஆறும் எனப் பொதுப்படக் கூறிய அதனானே, கண் நல்லள்-
தோள் நல்லள்- முலை நல்லள்- புருவம் நல்லள்- காது நல்லள்- எனவும்,

கண் நொந்தாள்- தோள் நொந்தாள்- முலை நொந்தாள்- புருவம் நொந்தாள்-
காது நொந்தாள்- எனவும்,

கண் நல்லர்- தோள் நல்லர்- முலை நல்லர்- புருவம் நல்லர்- காது நல்லர்-
எனவும்,