சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

506 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

நம்பி பொன் பெரியன்- என்ற தொடரில் நம்பி உடையான்; பொன்
உடைப்பொருள்.

நம்பி இல்லம் பெரியன்- என்ற தொடரில் நம்பி இடத்து நிகழ்பொருள்;
இல்லம்இடம்.

நம்பி வாழ்நாள் பெரியன்- என்ற தொடரில் நம்பி காலத்து இயலும்பொருள்;
வாழ்நாள் காலம்.

நங்கை மூக்குநல்லள்- என்ற தொடரில் நங்கை அவயலி; மூக்கு அவயவம்.

நங்கை நிறம் கரியள்- என்ற தொடரில் நங்கை குணி; நிறம் குணம்.

நங்கை கவவுக்கடியள்- என்ற தொடரில் நங்கை வினைமுதல்; கவவுதல் வினை.

இவ்வாறு இயைபுபற்றி உடைப்பொருள் முதலியவற்றின் இயல்பு உடையான்
முதலிய பொருள்மேல் ஏற்றப்பட்டவாறு.

கண்- தோள்- முலை- காது- புருவம் என்பன இவ்விரண்டாகவே கொண்டு
பொதுவாக எண்ணப்படும் உறுப்புக்கள் ஆதலின் இவற்றை இவற்றிற்கு உரிய
சினைவினையால் கூறின் பன்மை வாய்பாட்டதாகிய அஃறிணை வினையாலேயே
‘கண்ணொந்தன’ என்றாற்போலக் கூறல் வேண்டும்; ஆனால் இவை தத்தம் முதல்
வினையைக் கொண்டு முடியும்வழி அஃறிணைப் பன்மைவினை கோடல் வேண்டும் என்ற
யாப்புறவு இல்லை. முதல்வினை உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால்
வினையாயின் இவையும் முறையே கண்நொந்தான்- கண்நொந்தாள் கண்நொந்தார்-
என்றாற்போல முதல்வினை கொண்டே முடிந்துவிடும்.