சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-3,4507

முன்னைய இரண்டும் திணைபால் வழுவமைதி; பின்னது திணைவழுவமைதி.

கோடு என்பது பன்மைச்சினை. எனவே, கோடு கூரிது களிறு என்ற தொடரில்,
பன்மைச்சினை ஒருமை முதல்வினையைக்கொண்டு முடிந்த அஃறிணை முடிபாகிய
பால்வழுவமைதியே உள்ளது. குளம்பு கூரிது குதிரை என்பதும் அது. கோடு கூரிய களிறு
எனின் கூரிய என்பது முதற்கும் சினைக்கும் பொதுவாக ஏற்றவினை. ஆதலின் அது
வழா நிலையாம் என்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 


 

‘கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பாடு இலவே
தம்வினைக்கு இயலும் எழுத்தலங் கடையே.’
 



தொல்.சொல்.61 நன்.377


 

முழுதும்
‘கண்ணும் முலையும் கையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை உரைக்கும் கடப்பாடு இலவே.’
 



மு.வீ.ஒ.92
298
 
திணைவிரவு எண்ணுப்பெயர் சிறப்பினும் மிகவினும்
இழிபினும் ஒருமுடிபு எய்தும் என்ப,
 

 

இதுவும் அது.

இ-ள்: திணை விராய் எண்ணிய எண்ணுப் பெயர்கள் தலைமையானும்
பன்மையானும் இழிபானும் ஒன்றுபற்றி அதற்கு ஏற்ற ஒருமுடிபான் முடியும் என்று
கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 


 

எ-டு:
‘அங்கண் விசும்பில் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்- திங்கள்
மறுஆற்றும் சான்றோர் அஃதுஆற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
நாலடி.151