இவை திணைவிராய் எண்ணிப் பன்மைபற்றி உயர்திணையான் முடிந்தன. |
| ‘நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில் நற்பனுவல் நால்வேதத்து அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி ஆகுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ பெரும’ |
புறம்.15 |
எனவும், |
| ‘தொல்லை நால்வகைத் தோழரும் தூமணி நெடுந்தேர் மல்லல் தம்பியும் மாமனும் மதுவிரி கமழ்தார்ச் செல்வன் தாதையும் செழுநக ரொடுவள நாடும் வல்லை தொக்கது வளங்கெழு கோயிலுள் ஒருங்கே’ |
சீவக.2360 |
எனவும், இவை திணைவிராய் எண்ணித் தலைமைபற்றி அஃறிணையான் முடிந்தன. |
| ‘கோல்அஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும்- வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்பும்இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல்’ |
திரி.34 |
எனவும், |
| எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தெய்வம் உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள்’ |
ஆசார.5 |
எனவும், |
| கடுஞ்சினத்த கெரல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவருமென நான்குடன் மாண்டது ஆயினும்’ |
புறம்.55 |