எனவும் இவை திணைவிராய் எண்ணிப் பன்மைப்பற்றி அஃறிணையான் முடிந்தன. |
| | ‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய்எருமை என்றிவை ஆறும் குறுகார் அறிவுடை யார்’ | |
எனவும், |
| | ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாஅ’ | |
| எனவும், இவை திணைவிராய் எண்ணி இழிவுபற்றி அஃறிணையான் முடிந்தன. இருதிணைப் பெயரும் விராய்வந்து ஒருதிணைச் சொல்லான் முடிதல் வழு ஆயினும்,தலைமை முதலாயின பற்றி முடிதலான் அமைக எனத்திணைவழு அமைந்தவாறு ஆயிற்று. |
| | ‘பாணன் பறையன் துடியன் கடம்பன்என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை’ | |
எனத் திணை விரவாது உயர்திணையான் எண்ணி அஃறிணையான் முடிந்த இவ்வழு யாண்டு அமைக்கப்படுமோ எனின், பாணன் முதலாயினாரைக் குடி என்று சுட்டியவழிக் குடிக்கு ஏற்ற தொகை கொடுத்தல் வழுஅன்மையான் அமைத்தல் யாண்டையது என்க. |
| | ‘தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டனரேல் விட்டகல்க அம்மெல் இணர்தோய் அடம்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்’ |
சிலப்.7-32 |
எனவும், |
| | ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துணைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரிஅன்றே’ | |