சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

512 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்
யூபம் நட்ட வியன்களம் பலகொல்’-
 

 

 
எனப் பழி எய்தி வாழ்வாரோடு வெற்றித் தூணங்களை ஐயுற்று எண்ணி,
 
  ‘யாபல கொல்லோ?’
 

 
எனத்தலைமை பற்றி அஃறிணை முடிபு தந்தவாறு.

தோழர், தம்பி, தாதை, நகர், நாடு என்ற இருதிணைச் சொற்களும் எண்ணப்பட்டு
நாட்டினுள் தோழர் முதலியோர் அடங்குதலின், நாடு என்பதற்குத் தலைமை கொடுத்துத்
தொக்கது என நாட்டிற்கு ஏற்ற வினைதந்து முடித்தவாறு.

குடி- அமைச்சன்- காப்பு- என அஃறிணைச்சொல் இரண்டும் உயர்திணைச் சொல்
ஒன்றும் எண்ணப்பட்ட வழியும்,

எச்சிலார்- தீண்டார்- பசு- பார்ப்பார்- தீ- தெய்வம்- உச்சந்தலை- என
உயர்திணைச் சொல் மூன்றும் அஃறிணைச்சொல் நான்கும் எண்ணப்பட்ட வழியும்
(தெய்வம் பொருளால் உயர்திணை ஆயினும் சொல்லால் அஃறிணையேயாம்),

களிறும் மாவும் தேரும் மறவரும் என அஃறிணைச் சொல் மூன்றும்
உயர்திணைச்சொல் ஒன்றும் எண்ணப்பட்ட வழியும் பன்மை பற்றி அஃறிணைமுடிபு
கொண்டவாறு காண்க.

வடுகர் முதலிய மூவரும் உயர்திணையாகவும் சுடுகாடு முதலிய மூன்றும்
அஃறிணையாகவும், மூர்க்கன் உயர்திணை ஆகவும் முதலை அஃறிணை ஆகவும்,
இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையோடு ஒப்பவைத்து அஃறிணைமுடிபு
கொடுத்தவாறு காண்க.