சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

514 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆதலின், அதனையும் ஈண்டு ஒன்றென முடித்தலான் அமைத்தல் பொருந்தாமை அறிக.
 

அமைதி
 

‘திணைபால் பொருள்பலவிரவின’ (நன்.378) என்ற நூற்பா உரையில் ‘தானும்
.........உண்டான்’ எனத்திணை விரவிச் சிறப்பினால் ஆண்பால் முடிபு ஏற்றலும் கொள்க
என்று இக்கருத்தைப் பிறிதொருவாய் பாட்டால் தாம் சொற்றதை முனிவர் மறந்தார்
போலும்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘பலவயி னானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.’
‘எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா.’

முழுதும்
‘சிறப்புஅணி நடையால் திணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணிநர் கொளலே.’

‘திணைவிர வுப்பெயர் செய்யுள் மருங்கே
அஃறிணை முடிபின ஆகும் என்ப.’
 

தொல்.சொல்.51
நே.சொல்.10

நன்.378

தொ.வி.129


மு.வீ.ஒ.83

திணைபால் வழுவமைதி
 

299 உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் சொல்நோக் கினும்திணை பால்அவை
வழுக்கினும் வழுஎன வரையார் என்ப.
 
 

 

இது திணை வழுஅமைதியும் பால் வழுஅமைதியும் கூறுகின்றது.

இ-ள்: ஒன்றனை உவந்து கூறுதற்கண்ணும், உயர்த்திக் கூறுதற்கண்ணும், சிறப்பித்துக் கூறுதற்கண்ணும்,