என ஒப்பின்றி ஆண்பால் பெண்பாலாக உவப்பின்கண் பால் மயங்கி வந்தது. கன்னிஞாழல்- கன்னிஎயில்- எனவும், ஓர் எருத்தை நம்பி எனவும், ஒரு கிளியை நங்கை எனவும் அஃறிணை உயர்திணை ஆகி உயர்ச்சிக்கண் திணைமயங்கி வந்தன. ஒருவனையும் ஒருத்தியையும் இவர் வந்தார் போயினார் எனவும், ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றனையும் நீர்வந்தீர் போயினீர் எனவும், ஒருவன்தான் ஒருத்திதான் ஒன்றுதான் ‘யாம் வந்தேம் போயினேம்’ எனவும், |