| ‘இரவின் வருவானைப் புல்லலுறும் என் மனனே தோழா, | |
எனவும், |
| ‘தாயாகித் தலையளிக்கும் தண்துறை ஊரகேள்’ | (யா.கா-மேற்) |
எனவும் ஒருமைப்பால் பன்மைப்பாலாகவும் பெண்பால் ஆண்பாலாகவும் ஆண்பால் பெண்பாலாகவும் உயர்ச்சிக்கண் பால் மயங்கி வந்தன.வழக்கின்அகத்துப் பெருங்கொற்றன்- பெருஞ்சாத்தன்- என அடைசேர்மொழி இல்குணம் அடுத்து உயர்த்துக் கூறலும் ஈண்டே கொள்க. |
| கண்போலச் சிறந்தானை ‘என்கண்வந்தது’ எனவும், உயிர் போலச் சிறந்தானை ‘என்உயிர் வந்தது’ ‘ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் போல வரும்என் உயிர்’ | கலி.81 |
எனவும் உயர்திணை அஃறிணையாய்ச் சிறப்பின்கண் திணை மயங்கி வந்தன. |
| ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ | புறம்.186 |
எனவும், |
| ‘உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என் றப்பால்நாற் கூற்றே மருந்து’ | குறள்.950 |
எனவும், |
| ‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்’ | குறள்.69 |
எனவும் வருவன எல்லாம் ஈண்டே அமைத்துக் கொள்க. |
| பொறியறை வந்தது போயிற்று எனவும், கெழீஇயிலி வந்தது போயிற்று எனவும், பொய்ச்சீத்தை வந்தது போயிற்று எனவும் | |