உயர்திணை அஃறிணையாய்ச் செறலின்கண் திணைமயங்கி வந்தன. |
| ‘எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்’ | குறள்.144 |
எனவும், |
| ‘அவர் நமக்கு அன்னையும் அத்தரும் அல்லரோ தோழி புலவியது எவனோ அன்பிலங் கடையே’ |
குறுந்.93 |
எனவும் பன்மைப்பால் ஒருமைப்பாலாயும் ஆண்பால் பெண்பாலாயும் செறலின்கண் பால் மயங்கி வந்தன. |
| ‘ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் நோய்’ | குறள்.848 |
எனவும், |
| ‘இரவுஎதிர் கொள்ளா இருகால் பசுவே அரிய விரதம் அடங்குதல் இல்லார்’ | |
எனவும் உயர்திணை அஃறிணையாய் இழிப்பின்கண் திணை மயங்கி வந்தன. இழிப்பின்கண் பால் மயங்கி வந்தன வந்துழிக் காண்க. குடிமை நன்று- ஆண்மை நன்று- இளமை போயிற்று- மூப்பு வந்தது- அடிமை நன்று- வன்மை நன்று- விருந்து வந்தது- குழு நன்று- பெண்மை நன்று- அரசு வந்தது- வேந்து வந்தது- வேள் வந்தது- குரிசில் வந்தது- அமைச்சு வந்தது- புரோசு வந்தது- மக வந்தது- குழவி வந்தது- அலி வந்தது- அழிதூ வந்தது- குருடு தீது- முடந் தீது- பெருவிறல் வந்தது- அருந்திறல் வந்தது- எனவும், உலகம் பசித்தது- உயிர் போயிற்று- உடம்பு நுணுகிற்று- யாக்கை |