சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-5519

உணர்த்தலின் வேறுசொல் ஆதலே துணிவு ஆயினும் ‘பலபொருள் ஒருசொல்’ என்புழி எழுத்துஒப்புமை பற்றி ‘ஒருசொல்’ என்றார்.

குடிமை நல்லன்- ஆண்மை நல்லன்- என ஈறு திரியாது நின்றாங்கு நின்று குடிமை
ஆண்மை முதலியன உயர்திணை முடிபுகொண்ட வழியும்,

உலகர் பசித்தார்- காலன் கொண்டான்- என ஈறு திரிதற்கு ஏற்பன ஈறுதிரிந்து
வாய்பாடு வேறுபட்டு உயர்திணை முடிபு கொண்ட வழியும் வழு இன்மையின், நிலை
ஆகலான், ஈண்டைக்கு எய்தா என்க.

இந்நிகரனவாய்த் திணைபால் வழுவி வருவன உளவேல் அவற்றிற்கு எல்லாம்
இதுவே ஓத்தாக அமைத்துக் கொள்க. 5
 

விளக்கம்
 

இந்நூற்பா திணைபால் இரண்டன் வழுவமைதி கூறுவதற்கு எழுந்ததாகும்.

காதல்பற்றி ஒருவனை யானைஎன்ற அஃறிணை ஒருமையாகக் கூறுதலும் ஓர்
எருத்தினைத் தந்தை வந்தான் என உயர்திணை ஆண்பாலாகக் கூறுதலும், பசுவினை
எம் அன்னை வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாகக் கூறுதலும், பசுக்களைத் தாயர்
வருவர் எனப் பலர்பாலாகக் கூறுதலும் பால்வழுவாத திணை வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டு.

திரு என்பது திருமகளைக் குறிப்பதாகலின் ஆண் பாலைத் திரு என்று விளிப்பது
பால்வழுவமைதி. இவ்வழுவமைதிகள் உவப்பின்கண் வந்தன.

கன்னி என்ற உயர்திணைச்சொல் அஃறிணைப்பொருளாகிய ஞாழல்மரம், எயில்
என்பனவற்றொடு வருதலும்