வாறே உரையாசிரியர், நச்சினார்க்கினியர், மயிலைநாதர் ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். தெய்வச்சிலையார் வட வேங்கடம் தென்குமரி இவற்றிற்கு இடைப்பட்ட பகுதி செந்தமிழ் நிலம் என்பர். சிவஞானமுனிவர் பாண்டியநாடே செந்தமிழ்நாடு என்பர், நன்னூல் விருத்தியில்; அதனை விடுத்து இலக்கணவிளக்கச் சூறாவளியில் வேறு கூற விழைவர். | சூறாவளி | வடவேங்கடம் தென்குமரி என இரண்டு எல்லைக்கு உட்பட்டன எல்லாம் தமிழ்நாடாகவும், அவற்றுள் ஒரு நிலத்தைப் பிரித்துச் செந்தமிழ்நிலம் என்றற்குக் காரணம் அறியாமையின், அதற்கு எல்லை முன் உரை செய்தார் கூறியதே பற்றித் தாமும் உரைத்தார்; ஒருவர் சென்றவழியே சேறல் உலகு இயல்பு ஆகலின். முக்குணவயத்தான் முறைதிறம்ப உயிர்வருக்கத்துக்கு எல்லாம் பொதுவாதல் அறிக. கருவூரின் கிழக்கு எல்லாம் புனல்நாடேயாம். புனல்நாடு எனினும் சோணாடு எனினும் ஒக்கும். புனல்நாடு என்றாற்போலப் பொதுப்படக்கூறாது தென்பாண்டி என ஏகதேசத்தை பரித்து ஓதியதும் என்க. | அமைதி | தாம் பாண்டி நாட்டவராகவே, தம் நாட்டுப்பற்றை உட்கொண்டு, பண்டை உரையாசிரியர் பலரும் கருத்து வேறுபாடு எதுவுமின்றி ஒருமனப்பட்டுக் கூறிய செந்தமிழ் நாட்டு எல்லை பற்றிய செய்தியை வலியுறுத்தற்குத் தாம் சான்றுகாணும் ஆராய்ச்சியில் இறங்காது படையோர் உரைத்தாங்கு உரைத்த இவ்வாசிரியரிடம் குறை காண முற்பட்டு, முன்னவரையும் பழித்துரைப்பது முனிவருக்கு யாண்டும் இயல்பு என்க. | ஒத்த நூற்பாக்கள்: | ‘அவற்றுள், இயற்சொல் தாமே, |
|
|
|