சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-5521

மருந்தாகிய அஃறிணையின் கூறுகளாய் உற்றவன்- தீர்ப்பான்- உழைச்செல்வான்-
என்ற உயர்திணைப் பெயர்களைக் குறிப்பிடுவதும்,

மக்களாகிய உயர்திணைப் பொருள்களைத் ‘தம்பொருள்’ என அஃறிணை
வாய்பாட்டால் விளக்குதலும் ஓராற்றான் வழுவமைதியேயாம்.

பொறியறை, கெழிஇயிலி, பொய்ச்சீத்தை என்பன உயர்திணைப் பொருள்களை
உணர்த்தும் வெகுளியைப் புலப்படுத்தும் செறற் சொற்களாம். இவை வந்தது முதலிய
அஃறிணைச் சொற்கொண்டு முடிவது செறலின்கண் உயர்திணை அஃறிணையாகிய
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டுக்களாம்.

எனைத்துணையர் என்னும் பன்மைச் சொல் தேரான் என்ற ஒருமைச் சொல்லொடு
தொடர்தல் ‘செறலின்கண் பன்மை ஒருமைப்பால் மயக்கத்திற்கு எடுத்துக்காட்டு.

தலைவனாகிய ஆண்பாலை அவர் என்று உயர்த்தற்கண் பன்மையாகக் கூறிப்
பின் அத்தலைவனையே தமக்குத் தாய் என்று கூறுவது செறலின்கண் ஆண்பால்
பெண்பாலாகக் கூறப்பட்ட வழுவமைதியாம்.

செய்கலான் தேறான் ஆகிய உயர்திணைச் சொற்களை அவ்வுயிர் என
அஃறிணையாகச் சுட்டுவதும், மனிதனை இருகால் விலங்கு என்று சுட்டுவதும்
இழிபின்கண் வரும் திணை வழுவமைதியாம்.

‘சொல் நோக்கினும்’ என்ற தொடருக்குத் தொல்காப்பியத்தை ஒட்டி உயர்திணை
அஃறிணை இரண்டன் கண்ணும் குடிமை நல்லன், குடிமை நன்று’ என்றாற் போலவரும்
குடிமை ஆண்மை முதலிய சொற்களையும், உயர்திணைப்