சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

534 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எ-டு: எனக்குத் தந்தான்- நினக்குத் தந்தான்- என்னுழை வந்தான்- நின்னுழை
வந்தான்- எனவும், ஈங்கு வந்தான் எனவும், அவற்குக் கொடுத்தான்- அவன்கண்
சென்றான்- எனவும், ஆங்குச் சென்றான் எனவும் ஈற்றான் அன்றித் தரப்படும்
பொருளும் வரவுத்தொழிலும் கொடைப் பொருளும் செலவுத்தொழிலும் தன் கண்ணும்
முன்நின்றான் கண்ணும் படர்க்கைக்கண்ணும் சென்று உற்றன.

பொதுவிதியான் மூன்று இடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவும்
கொள்ளவைத்தமையானே,
 

  ‘பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல்’
‘மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு’
புறம்.55

குறுந்.292

எனவும்,
 
  ‘பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’
அகம்.36

எனவும், சாந்துகொடு எனவும்.
 
  ‘அரிமலர் ஆர்ந்தகண் அம்மா அரிவை
திருமுகமும் திங்களும் செத்துத்- தெருமந்து
வையத்தும் வானத்தும் செல்லாது அணங்காகி
ஐயத்து நின்றது அரா’



யா.வி.57-மேற்.

எனவும் தன்மை முன்னிலைக்கு உரிய தரலும் வரலும் படர்க்கையிடத்தும், படர்க்கைக்கு
உரிய கொடைச்சொல் தன்னைப் பிறன் ஒருவன் போலக்கூறும் கருத்துவகையான்
தன்னிடத்தும், செலவுதொழில் ஈங்கு என்பது படநின்று ஐயத்திடத்தும் சென்று
மயங்குதலும் கொள்க.