சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

536 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

போதல் - புகுதல்- என்ற முதல் நிலைகள் இடத்து குறித்து நிற்றல் இக்காலத்துப்
புதியன புகுதலாய் வருகின்றன. பொதுவிதி இந்நூற்பாவின் முன்னிரண்டு அடிகள்.

தரப்படும் பொருளை ஏற்பான் தானும் முன்னின்றானும் ஆகலானும்,
வரவுத்தொழில் தன்கண்ணும் முன்னின்றான் கண்ணும் நிகழ்தலானும் இவ்விரண்டு
தொழிலும் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரியவாயின.
 

  ‘அமரர்க்கு வென்றி தந்த அண்ணல்’
‘அரிவைக்கு புனல்தரு பசுங்காய்’
‘வேட்டுவற்கு வரால் வாராது’
‘ஈங்கும் வானத்தும் அராச் செல்லாது’

 

சாந்துகொடு- என்பன மயங்கி வந்தன. அமரர், அரிவை வேட்டுவன்- படர்க்கையிடத்தன; ஈங்கு- தன்மை.

உயர்ந்தோன் தன்னின் இழிந்தோன் ஒருவனிடம் ஒன்று பெறுதற்கண் ‘கொடு’
என்ற சொல்லை வழங்கும்.

எனக்குக் கொடு என்ற கருத்தில் தன்னைப் பிறன் போலக்கொண்டு ‘இவற்குச்
சாந்து கொடு’ என்று தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் கொடு என் கிளவி வரும்
என்றார் தொல்காப்பியனாரும். ஐயத்தால் அரவு வையமாகிய ஈங்கும் வானத்தும்
செல்லாது நின்றது என்று இவர் பொருள் கொண்டுள்ளார்; ‘ஈங்கு’ என்னும்
தன்மையிடத்துச் செலவு மயங்கிற்று.

பிறனைக்காட்டி ‘இவற்குக்கொடு’ என்று கூறுதல் படர்க்கைச்சொல்
படர்க்கைச்சொற்கொண்டு முடிந்த வழா நிலையாம்.

இறுதிப்பத்தி நச்சினார்க்கினியர் ‘கொடு என்கிளவி’ தொல்.சொல்.448இல் கூறிய
விளக்கத்தை மறுப்பதுபோல அமைந்துள்ளது. உரை பெரும்பாலும் ‘தரவினும் வரவினும்’ முதலிய தொல்.சொல் 28, 29, 30, 446- நூற்பாக்களுக்குச் சேனாவரையர் உரைத்தவற்றை ஒட்டியதே.