இது நிகழ்காலத்துச் சொல் ஏனைக்காலங்களையும் உணர்த்தும் என வழு அமைக்கின்றது. இ-ள்: மூன்று காலத்தினும் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையைச் சொல்லுவர் சான்றோர் நிகழ்காலச் சொல்லானே என்றவாறு. நிகழ்காலச்சொல் என்றாரேனும் இறந்த காலத்தையும் எதிர்காலத்தை யும் அகப்படுத்தி மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யும் என்னும் முற்றும் எச்சமுமே கொள்க. மலை நிற்கும்- தீச்சுடும்- ஞாயிறு இயங்கும்- திங்கள் இயங்கும்- எனவும், |