இஃது எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் எனவும், இறப்பும் எதிர்வும் நிகழ்வொடு மயங்கும் எனவும், எதிர்வு இறப்பொடும் நிகழ்வொடும் மயங்கும் எனவும், இறப்பும் எதிர்வும் நிகழ்வும் ஏனையவற்றொடும் தம்முள் மயங்கும் எனவும் வழு அமைக்கின்றது. இ-ள்: விரைவுப் பொருண்மையை உடைய வினைச் சொற்கண்ணும், இருவினைகள் பலவற்றுள்ளும் சிறந்த இரு வினைக் கண்ணவாகிய தவம் செய்தல்- தாயைக்கோறல்- முதலிய வினைச் சொல்லை நோக்கி அம்மிக்கதனது திரிபு இன்றிப் பயக்கும் பண்பைக் குறித்து வரும் சுவர்க்கம் புகுதல்- நிரயம் புகுதல்- முதலிய வினைமுதல் வினைச் சொற்கண்ணும், வழங்கலாற்றான் இஃது இப்பெற்றித்து என அப்பெற்றியான் ஒருதலையாக அறிந்திருந்த இயல்பு பொருண்மைக்கண்ணே நிகழும் வினைச்சொற்கண்ணும், |