சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-10541

இது நிகழின் இது நிகழும் என நூல் நெறியான் தெளியப்படும் தெளிவுப்
பொருண்மைக்கண்ணே நிகழும் வினைச் சொற்கண்ணும், விரைவு முதலிய இத்தன்மையை
உடைய பொருண்மையைக் குறியாது வரும் இடத்தும் மூன்று காலங்களும் பொருந்தும்
இடத்து மயங்கும் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

மூன்று காலமும் தம்முள் மயங்கும் என்றாரேனும் ஏற்புழி’ என்றதனானே, சோறு
பாணித்தவழி உண்ணாது இருந்தானைப் போகல் வேண்டும் குறையுடையான் ஒருவன்
இன்னும் உண்டிலையோ’ என்றவழித் தொழில் இறந்தது இன்றேனும் குறிப்பான்
இறந்ததாகக் கருதி ‘உண்டேன் போந்தேன்’ எனவும்,

உண்ணா நின்றானை அவ்வாறு கூறியவழியும் ‘இதோ உண்டேன் போந்தேன்’
எனவும் விரைவுபற்றி எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் எனவும்,

யாவன் தவம் செய்தான் அவன் சுவர்க்கம் புகும்- யாவன் தாயைக் கொன்றான்
அவன் நிரயம் புகும் எனவும்,

ஒருவன் தவம் செய்யின் சுவர்க்கம் புகும்- தாயைக் கொல்லின் நிரயம் புகும்
எனவும் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாது இங்ஙனம் பொதுவகையான் கூறியவழி மிகுதி
பற்றி இறப்பும் எதிர்வும் நிகழ்வொடு மயங்கும் எனவும்,

இக்காட்டில் போகின் கூறை கோட்படுவன் எனற்பாலது கூறை கோட்பாட்டான் -
படுகின்றான்- எனவும்,

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறியது கண்டுழி, மழை பெய்வதாம் என்னாது
மழைபெய்தது- மழைபெய்கின்றது. எனவும் முறையே இயல்பும் தெளிவும் பற்றி எதிர்வு
இறப்போடும் நிகழ்வோடும் மயங்கும் எனவும்,