சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

542 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவர்பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர் எனவும், நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என் செய்குவை எனவும்,

இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும், நாளை வரும் எனவும்
விரைவு முதலிய பொருண்மை குறியாது முறையே இறப்பும் எதிர்வும், எதிர்வும் இறப்பும்,
இறப்பும் நிகழ்வும், எதிர்வும் நிகழ்வும் மயங்கும் எனவும் கொள்க.
 

  ‘வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்’
தொல்.சொல்.241
எனவும்,
 
  ‘மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே’
242
எனவும்,
 
  ‘வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்புத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை’
245
எனவும்,
 
  ‘இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி’

247
எனவும்,
 
  ‘ஏனைக்காலமும் மயங்குதல் வரையார்’ 248
எனவும் வருவன ஓத்து ஆகலான்,