சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

546 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஐய வினா- குற்றியே மகனோ தோன்றுகின்ற உருவு என வினாவுவது.

அறிபொருள் வினா- அறியப்பட்ட பொருளையே வேறு அறிவும் அறிவுறுத்தலும் முதலிய பயன் நோக்கி அவ்வாய்பாட்டின் ஒன்றான் வினாவுவது.

கொடுத்தற்கண் வரும் வினா-சாத்தற்கு ஆடை இல்லையோ என வினாவுவது.

கோடற்கண் வரும் வினா- மணி உளவோ வயிரம் உளவோ என வினாவுவது.

ஏவற்கண் வரும் வினா- சாத்தா உண்டாயோ என வினாவுவது. பிறவும் அன்ன.

கடைநிலை நான்கும் அறியலுறவு வெளிப்படுப்பன அன்மையின் வழுவாம் ஆயினும், வினா வாய்பாட்டான் வினாவப்படுதல் நோக்கி அமைக்கப்படுதலின் வழாநிலை ஆகிய ‘முதல்நிலை அனைய’ என்றார்.

அறிபொருள் வினாவின்கண்ணே அறிவு ஒப்புக்காண்டலும் ஐயம் அறுத்தலும் அவன் அறிவு தான் கோடலும் மெய் அவற்குக் காட்டலும் அடங்கும்.

இனிக் கொடை முதலிய மூன்றனையும் இதன்கண்ணே அடக்கி வினா மூன்று என்பாரும் உளர். 11
 

விளக்கம்
 

வழாஅல் ஓம்பல்- 295ஆம் நூற்பாச் செய்தி.

வினா என்பது பொதுவகையான் அறியப்பட்ட தொன்றனைச் சிறப்பு வகையான் அறிய விரும்புவதனை வெளியிடுவது.