சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-12,13549

அறுவகை வினாவினுள், யாது- எவன்- என்ற இரண்டும் அறியான் வினா
ஒன்றற்கே வரும் என்பது.

எவன் என்பது என்ன என்ற பொருளுடையது.

அறியாப் பொருள்- பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான்
அறியப்படாத பொருள்.

இச்சொற்குப் பொருள் யாது என்புழிச் ‘சொல் ஒவ்வொன்றும் பொருளுடையது’ என்பது பொதுவகையான் அறியப்பட்ட பின்பே இவ்வினா எழும்என்பது உணரப்படும்.

யா, யாவை- பலவின் பாலினையும், யாவன்- ஆண் பாலினையும், யாவள்-
பெண்பாலினையும், யாவர்- பலர் பாலினையும், யார்- உயர்திணை என்பதனையும்,
யாண்டு- யாங்கு- என்பன இடத்தினையும் குறிப்பிடுதலின் அவை சிறிது அறியப்பட்ட
பொருள் பற்றியே வரும் என்றார்.

யாது என்பதும் ஒன்றன் பாலினையும், எவன் என்பதும் அஃறிணை
இருபாலினையும் உணர்த்தலின் சிறிது அறியப்பட்டனவே எனின், வினாவுவானோ விடை
இறுப்பானோ அச் சொற்களை அவ்வெண்ணத்தோடு காண்பது உலகியலில் இல்லை
என்று அமைதி கூறுகிறார். இறுப்பானும் என்ற உம்மை வினாவுவானையும் தழுவியது.


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘யாது எவன் அறியாப் பொருளொடு சிவணும்.’
தொல்.சொல்.31
மு.வீ-ஒ.65
   
 
307. அவற்றுள்
யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே.