இது ‘வழாஅல் ஓம்பல்’ என மேல் கூறிப்போந்த என்ற ஆவது இன்னது என்பதூஉம், இத்துணைத்து என்பதூஉம், அதன் வழுவமைதியும் கூறுகின்றது. இ-ள் வினாயபொருளை அறிவுறுப்பதாகிய சொல் இறை என்பதாம். அது செவ்வன் இறையும் இயைபயப்பதும் என இரண்டு பகுதியை உடைத்தாம். அவற்றுள் இறை பயப்பது வினாஎதிர் வினாதலும் ஏவுதலும் மறுத்தலும் உற்றது உரைத்தலும் உறுவது கூறலும் உடன்படுதலும் சொல் தொகுத்து இறுத்தலும் என ஆராயுங்காலத்து ஓரேழ் வகையினை உடைத்தாம் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு. எ-டு: உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து என்றும், இச்சொற்குப் பொருள் யாது- கருவூர்க்கு வழியாது- என்று வினாயவழி இது என்றும், சாத்தா உண்டியோ என்று வினாயவழி உண்ணேன் என்றும் உண்பல் என்றும், இங்ஙனம் செவ்வனே இறுப்பன எல்லாம் செவ்வன் இறையாம். இனி இவ்வாறு அன்றி, சாத்தா உண்டாயோ என்று வினாயவழி உண்ணேனோ என்றும், |