சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

552 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இங்ஙனம் இறுப்பன எல்லாம் ஒருவாற்றான் உண்பல்- உண்ணேன்- இல்லை-
என்பன பயத்தலான் இறைபயப்பனவாம்.

உண்பல்- உண்ணேன்- இல்லை- எனச் செவ்வனே கூறாது தான் ஒன்றை
வினாவுவான் போன்றும், ஒருவனை ஏவுவான் போன்றும், உறாநின்றதனையும்
உற்றதனையும் உறுவதனையும் உடம்படுதற்கு இயைவனவற்றையும் உரைப்பான்
போன்றும், சொல்லைத் தொகுப்பான் பிறிது ஒரு பொருளைக் கூறுவான் போன்றும்
இறுத்தலான் செப்புவழு ஆயினும் வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்தலின்
அமைந்தவாறு காண்க.

செப்பு உத்தரம் என்பதனொடு ஒருபொருட் கிளவி ஆதலின் வினாய பொருளை
அறிவுறுத்தலே செப்பிற்கு இலக்கணமாம் என்க.

அற்றேல், ‘குமரி ஆடிப்போந்தேன்; ஒருபிடி சோறு தம்மின்’ என வினா இன்றி
நிகழ்ந்த சொல் யாண்டு அடங்கும் எனின், ‘தேரின்’ என்றதனானே. அறியல் உறுதலை
உணர்த்தாது ஒன்றனை அறிவுறுத்தி நிற்றலின் செப்பின்பாற்படும் என்க.

மறுத்தலைப் பயப்பதனை மறுத்தல் என்றும் நேர்தலைப் பயப்பதனை நேர்தல்
என்றும் கூறினார், ஆகுபெயரான் என்பது,


விளக்கம்

 
வழாஅல் ஓம்பல்- 295ஆம் நூற்பா.
விடை இன்னது என்பது- வினாய பொருளை அறிவுறுப்பது.

இத்துணைத்து என்பது- செல்வன்இறை, இறைபயப்பது என்பன.
அதன் வழுவமைதி- இறைபயப்பதன் வகைஏழும்.
உண்ணேனோ- வினா எதிர்வினாதல்.