சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

554 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

நேமிநாத ஆசிரியர் விடைவகை எதிர்வினா- உற்றது உரைத்தல்- ஏவல்- உறுவது
கூறல்- மறுத்தல் - உடன்படுதல்- என்ற ஆறாகக் குறிப்பிட்டார்.

நன்னூலார் விடைவகை சுட்டு- மறை- நேர்- ஏவல்- வினாதல்- உற்றது
உரைத்தல்- உறுவது கூறல்- இனமொழி- என்ற எட்டு என்றார்.


ஒத்த நூற்பாக்கள்
 

  ‘வினாவும் செப்பே வினாஎதிர் வரினே.’
‘செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.’

‘ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும்- பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்றெனினும் மன்ற
இறுத்தலே போலும் இவை.’

‘சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்ற துரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப.’
தொல்.சொல்.14

தொல்.சொல்.15




நே.சொல்.7




நன்.386


செப்பு, வினா- வழுக்காத்தல்
 

309. செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு
அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே.

 

இது செப்பு வழாநிலைக்கண்ணும் வினா வழாநிலைக்கண்ணும் பொருள் ஆராய்ச்சி
உள்வழி வழுவற்க என்கிறது.

இ-ள்: செப்பு வழாநிலைக் கண்ணும் வினா வழாநிலைக் கண்ணும் சினைக்
கிளவிக்கும் முதற் கிளவிக்கும் உறழ் பொருளும் துணைப் பொருளும் அவ்வப்
பொருளுக்கு அவ்வப் பொருளேயாம் என்றவாறு.