எனவே, சினையும் முதலும் தம்முள் மயங்கி வருதல் வழு என்பதாயிற்று. உறழ்பொருள் ஆவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படுவது. துணைப் பொருளாவது ஒப்புமை கூறப்படுவது. எ-டு: இவள் கண்ணின் இவள் கண் பெரிய-நும் அரசனின் எம் அரசன் முறை செய்யும்- எனவும், இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ? எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ? எனவும், இவள் கண் ஒக்கும் இவள் கண்- எம் அரசனை ஒக்கம் நம் அரசன்- எனவும், இவள் கண் ஒக்குமோ இவள் கண்? எம் அரசனை ஒக்குமோ நும் அரசன்? எனவும் வரும். |