சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

556 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

செப்பினும் வினாவினும் சினையும் முதலும் மயங்குதலும் கூடாது என்பது.

இவள் கண்ணின்- இவள் கண்ணைக்காட்டிலும்- என்பது உறழ்தல்.

தோள் கோலினும் தண்ணிய என்பது சினை முதலோடு மயங்கியதாம். தலைவி
தளிரை அன்னோள் என்பது முதல் சினையோடு மயங்கியதாம். உவமம் கூறுதற்கண்
முதல் சினை மயக்கம்,
 

  ‘முதலும் சினையுமென்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய’
தொல்.பொருள்.281

என்ற உவமவியல் நூற்பாவான் அமைக்கப்படும்.

கண் நல்லவோ கயல் நல்லவோ- என்பது கண்ணை வருணித்து ஐய உவமை
வாய்பட்டாற் கூறிய உரைச்செய்யுளாம்.
 

  ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலைப் பிறந்த காமரு மணியும்’
புறம்.281

என இனமாய பொருளே எண்ணப்பட்டவாறு காண்க. இது தொல்காப்பிய நூற்பா. உரை
சேனாவரையர் உரைப் பகுதி.


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘.........சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்.........
உறழ்வும் சிதைந்த உரை’
‘வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல்.’
தொல்.சொல்.16

நே.சொல்.6
நன்.387