இது நிறுத்த முறையானே இயற்சொல்லும் திரிசொல்லும் உணர்த்தி, அவற்றின் பகுதியாய் இடைநின்ற பெயர்வினை இடைஉரி நான்கனையும் மேல் உணர்த்திய நிறீஇ, என்றாகிய இரண்டனுள் திசைச்சொல் ஆமாறு உணர்த்துகின்றது. இ-ள்: செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந் தமிழ் நாடு பன்னிரண்டன் கண்ணும், பதிணென் நிலத்துள் இருவகைத்தமிழாய் ஒருமொழி நிலத்தை ஒழிந்த மற்றைப் பதினேழ் நிலத்தின்கண்ணும் தத்தம் குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல் என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனையும், |