| ‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் யான்அலது இல்லைஇவ் வுலகத் தானே’ | அகநா.268 |
என்றாற் போல வருதலையும் சுட்டினார். இச்சூத்திரக்கருத்தைப் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் |
| ‘புல்லியோர் பண்டம் கொள்வார் வினவிய பொருள்தம் பக்கல் இல்லெனின் இனமாயுள்ள பொருளுரைத் தெதிர்மறுத்தும் அல்லதப் பொருளுண் டென்னின் விலைசுட்டிஅறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபங் கொள்வார் தொன்மரபு இருக்கை சொல்வாம்’ | (நகரப்படலம்-58) |
என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்.’
‘அப்பொருள் கூறின் சுட்டிக்கூறல்.’ ‘பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும் பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே.’ ‘தம்பால் இல்லது இல்லெனின் இன்னாய் உள்ளது கூறி மாற்றியும் உள்ளது சுட்டியும் உரைப்பர்சொற்சுருங்கு தற்கே.’ ‘யாதெனும் ஒருபொருள் அல்லதுஇல் என்பான் அஃதல பிறபொருள் அறைவது வழக்கே.’ | தொல்.சொல்.35
36
37
நன்.406
மு.வீ.ஒ.69 |