சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-18563

நெய்க்குடம்- குளநெல்- கார்த்திகை விளக்கு- பூந்தோடு- கருங்குவளை-
குறுங்கூலி- எனவும்,
 

  ‘பொற்கோட்டி இமயமும் பொதியிலும் போன்றே’

‘வடவேங்கடம் தென்குமரி’ தொல்.பாயிரம்.
‘வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன’
‘சிறகர் வண்டு செவ்வழி பாட’
‘செஞ்ஞாயிற்றுள் நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்’
 
புறம்.2


புறம்.321
சீவக.74

புறம்.38
கோட்சுறா- எனவும்,

உப்பளம்- ஊர்மன்று- சிறுகாலை- காலிமாடு- செம்போத்து- தோய்தயிர்- எனவும்

செய்யுட்கண்ணும் வழக்கின்கண்ணும் முறையே பொருள் முதல் ஆறாம் அடைசேர்
மொழி இனம் உள்ளதற்கும் ஒரோவழி இனம் இல்லதற்கும் உரித்து ஆயவாறு காண்க.
பிறவும் அன்ன. 18
 

விளக்கம்
 

  இனத்தைச் சுட்டுதல்- வழாநிலை.
இனஞ் சுட்டாமை- வழுவமைதி.

 

தாமரை என்பது பொது. செந்தாமரை என்ற பண்புத் தொகைநிலைத்தொடரில்
செம்மையாகிய பண்பு தாமரைக்கு அடையாகித் தன் இனமாகிய வெண்டாமரையை
விலக்கி நின்றது.

செஞ்ஞாயிறு என்ற தொடரில் செம்மை ஞாயிற்றினிடம் உள்ள செம்மையை
வெளிப்படுப்பதே யன்றித் தனக்கு இனமான பிறிது ஒன்றனையும் விலக்கும் ஆற்றல்
உடைத்து அன்று. ஆயினும் அணி குறித்து நிற்றலின், அது வழுவமைதியாகக்
கொள்ளப்படும்.