இயற்கைப்பொருள்- தன்னியல்பு மாறாமல் இருக்கும் பொருள். செயற்கைப்பொருள்- காரணத்தால் தன்மை திரிந்த பொருள் செயற்கைப்பொருள் ஆக்கம் பெற்று வரும். ஆக்கம் காரணம் பெற்றும் பெறாதும் வருதல் உண்டு என்பது. எனவே, செயற்கைப்பொருட்கு ஆக்கம் இன்றிமையாது வருதல் வேண்டும். மயிர்நல்ல, பயிர்நல்ல- செயற்கைப்பொருள் பற்றிய செய்தி. ஆயின- ஆக்கம். கடுக்காய் கலந்த கையாந்தரைச் சாறு பெற்ற எண்ணெய் பெறுதலும், எருவைப்பெய்துகளையை இளமையிலேயே அகற்றிப் போதிய நீரைத் தேக்கி வைத்தலும் முறையே காரணம். நிலம் மெலிது- நீர்வெய்து- செயற்கைப்பொருள் பற்றிய செய்தி- ஆயிற்று. ஆக்கம்; நீர் கலத்தலும் தீச்சார்தலும் முறையே காரணம். மயிர் நல்லவாயின முதலியன காரணம் இன்றி வந்தன. இற்று என்ற வினைக்குறிப்பு வாய்பாட்டான் இத்தன்மைத்து என்று பொருள்படும் தெரிநிலை வினையும் கொள்ளப்படும். சேற்றுநிலம் மிதித்தவனது ஊற்றினுக்கு வன்னிலம் வலிதாதல் பண்டு மெலிதாய் ஊறுதந்தது வலிதாய் மாறியது என்றது வேறுபாடு காட்டுவ செயற்கைப்பொருளின் ஆக்கமேயாம். தோள் சாயல- செயற்கைப் பொருள் பற்றிய செய்தி. ஆயின- ஆக்கம்; முருகன் கண்ணியைக் கூந்தலில் பெய்தல்- காரணம். |