இம்முறை அடை சினை முதல் என்ற மூன்றும் தொடர்ந்துவரும் வழியே கொள்ளப்படும், அடை என்பது, வண்ணம் வடிவு அளவு சுவை என்ற நான்கனையும் குறிக்கும் என்பது. செங்கால் நாரை முதலிய மூன்றும் அடை சினை முதல் போன்ற முறையே வழக்கில் வந்தன. சிறுகருங்காக்கை, இளம்பெருங்கூத்தன் என்பன இரண்டு அடைகள் முதலை அடுத்து வழக்கின்கண் வந்தன. சிறுபைந்தூவி, கடுநெடுங்கண் என்பன இரண்டு அடைகள் சினையை அடுத்துச் செய்யுட்கண் வந்தன. செவி செஞ்சேவல், வாய்வன் காக்கை, பெருந்தோள்......என்பதை- செய்யுட்கண் முறை மயங்கி வந்தன. பெருந்தோள்.............பேதை என்பது பெருந்தோட்பேதை, சிறுநுசுப்பின் பேதை, பேரமர்க்கட்பேதை எனப் பொருள்படும் வழி அடை சினை முதல் மயங்காது வந்தமை சேனாவரையரால் விளக்கப்பட்டுள்ளது. |