இதுவரையறை உடைய பொருள்மேலும் உலகத்தில் இல்லாத பொருள்மேலும் சொல் நிகழ்த்துழிப் படுவது ஒரு மரபு கூறுகின்றது. இ-ள்: கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட பொருள் முதலிய அறுவகைப் பெயர்களும் உலகத்து இல்லாத பொருள்களும் முடிக்கும் சொல்லொடு படும் தொகுதிப் பெயர்க்கண்ணும், பொருளும் இடமும் காலமும் முதலியவற்றொடு படுத்துக் கூறுதற்கண்ணும் முறையே முற்றும் எச்சமும் ஆகிய அவ்விரண்டு உம்மையும் தெளியப் பெறுதல் மரபு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |