சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-21573

  ‘உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’
பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை-
குருடுகாண்டல் பகலும் இல்லை-
நாலடி.104

எனவும் முறையே இனைத்து என்று அறிபொருள் முற்றும்மையும் உம் உலகின்
இலாப் பொருள் எச்ச உம்மையும் பெற்று வந்தவாறு காண்க. பிறவும் அன்ன.

‘இனைத்து என்று அறிபொருள்’ எனவே, முன் அறியப்படாக்கால் தமிழ்நாட்டிற்கு
வேந்தர் மூவர் எனவும்,

பொருள் முதலியவற்றொடு படுத்தற்கண் எனவே, அவற்றொடு படுத்தாதவழிப்
பவளக்கோட்டு நீலயானை இல்லை எனவும் உம்மை பெறாதும் வரும் என்பதாம்.

நான்மறை முதல்வர் வந்தார்- ஐந்தலைநாகம் உடன்றது என்புழி இனைத்து என்று
அறிபொருள் ஆயினும் வினைப்படு தொகுதி அன்மையின் உம்மை பெறா ஆயின.
அஃதேல்,
 

  ‘பன்னிரு கையும் பாற்பட இயற்றி’ முருகு.118

என்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கை- என்பதனொடு ஒட்டி
நிற்றலின் வினைப்படு தொகுதி அன்று ஆகலின் உம்மை வேண்டாபிற எனின்,
அங்ஙனம் ஒட்டிநின்றது ஆயினும் நான்மறை முதல்வர்- ஐந்தலைநாகம்- என்பன
போலாது இருசொல்லும் ஒருபொருள்மேல் வருதலின் கை என்பதனொடு ஒட்டி இயைந்த
இயற்றி’ என்னும் வினை தொகுதிப் பெயரொடும் இயைந்ததாம். அதனான் அது
வினைப்படு தொகுதியாம் ஆகலின் உம்மை வேண்டும் என்க.

அற்றேல், கண்இரண்டும் குருடு- எருது இரண்டும் மூரி- எனப் பெயர் கொண்டவழி
உம்மை பெறுமாறு என்னை எனின், பெயராக வினையாக முடிக்கும் சொல்லொடு
படுதலே ஈண்டு வினைப்படுதல் ஆகலின் அவையும் வினைப்படு தொகுதியாம் என்க.