வரையறை உடைய பொருட்கு முற்றும்மையும், உலகில் இல்லாத பொருட்கு எச்ச உம்மையும் கொடுக்க. சேனாவரையர் ‘மன்னாப் பொருளும்’ சொல். 34 என்ற நூற்பாவில் ஏற்புழிக்கோடலால் கொண்ட பொருள் இடம் காலம் என்பனவற்றை இவர் நூற்பா வாயிலாகவே குறிப்பிட்டுள்ளார். மூவேந்தரும், உலகம் மூன்றும்; காலம் மூன்றும், கண் இரண்டும், சுவை ஆறும், கதி ஐந்தும் என்பன முறையே பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய பெயர்கள் முற்றுமை பெற்றமைக்கு எடுத்துக்காட்டு. உறுவர்க்கும் ஆகா, சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை, பகலும் இல்லை என்பன முறையே இல்லாப்பொருள் பொருளும் இடமும் காலமும் அடுத்து எச்ச உம்மை பெற்றமைக்கு எடுத்துக்காட்டு. இளைத்து என்று அறியாவழி உம்மை கொடுத்தல் வேண்டா- இல்லாப் பொருள் இடம் முதலியவற்றோடு படுத்துச்சொல்லாதவிடத்து உம்மை பெறாது. நான்மறையும் வல்ல முனிவர், ஐந்தலையும் உடைய நாகம் என்ற தொடர்களில் வல்ல, உடைய என்பன வினைப் படுதொகுதியாகிய முடிக்குஞ் சொல். இச்சொற்கள் இல்லையேல், நான்மறை முனிவர் ஐந்தலை நாகம்-என உம்மை இன்றியே வரும். மறை என்பதற்கு முனிவர் என்பது, |