எனவும், நம்பி அவன் அவன் நம்பி- நங்கை அவன் அவள் நங்கை- எனவும், எருது அது அதுஎருது- குதிரைஅது, அதுகுதிரை- எனவும், சாத்தன் அவன், சாத்தன்அது அவன்சாத்தன், அதுசாத்தன்- சாத்திஅவள், அவள்சாத்தி, அதுசாத்தி எனவும் முறையே காண்க. அவன் வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க எனின், அவனும் நம்பியும் வேறாய் அவன் வருந்துணையும் நம்பி சோறு பெறாது இருந்தான் ஆவான் செல்லும் ஆதலின், அங்ஙனம் கூறற்க என மரபு வழுவற்க என்றவாரும் என்பது. |