சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

578 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பெயர்கொண்டு முடிவுழி வழு இன்மையின் அதற்கு வழு அமைத்தல் இன்று;
பெயர்க்கு எங்கும் வரும் என வழுவற்க என்றவாறாம் என்பது.

இனிச் சாத்தன் கை எழுதுமாறு வல்லள் அதனால் தந்தை உவக்கும்- சாத்தி சாந்து
அரைக்குமாறு வல்லன் அதனால் கொண்டான் உவக்கும்- எனச் சுட்டு முதலாகிய
காரணக் கிளவியும்,
 

  சாத்தன் வந்தான் அஃது அரசர்க்குத் துப்பு ஆயிற்று-
கிழவன் பிரிந்தான் அதனைக் கிழத்தி உணர்ந்திலள்-
 

 
எனக் காரணம் இன்றித் தொடர்மொழிப் பொருளைச் சுட்டி வரும் சுட்டுப் பெயரும்
தன்னினம் முடித்தலான் ‘சுட்டுப் பெயர் இயற்கையின் செறியத் தோன்றுதல்’ கொள்க.

சுட்டு முதலாகிய காரணக் கிளவி உருபு அன்று; உருபு ஏற்ற சுட்டுப் பெயரோடு
ஒரு தன்மைத்து ஆகிய இடைச் சொல்; என்னை? அது பிளவுபடாது ஒன்று பட்டு
இசைத்தலின். 22
 

விளக்கம்

படர்க்கை முப்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றனை ஒன்று கொண்டு முடியும்
இடத்து, நம்பி அவன், அவன் நம்பி என்று எதனை முற்கூறினும் அமையும்.

இரண்டும் வெவ்வேறு வினை கொள்ளும் இடத்து மூவகைப் பெயர்களையும்
முன்னும், சுட்டுப்பெயர்களைப் பின்னும் கூறுதல் வேண்டும்.

வழக்காறு நோக்கி அ, இ, உ- என்ற சுட்டு மூன்றனுள் அகரச்சுட்டே
கொள்ளப்பட்டது.

நம்பி நங்கை என்ற உயர்திணைப் பெயரும், எருது குதிரை என்ற
அஃறிணைப்பெயரும், சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்ற விரவுப்பெயரும்