சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

58 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

நிறுத்தமுறை- 171 ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை.
                    இருவகைத்தமிழ்- செந்தமிழ், கொடுந்தமிழ்.

தென்பாண்டி நாடு முதல் புனல்நாடு ஈறாகிய பன்னிரண்டும் கொடுந்தமிழ்நாடு
என்று மயிலைநாதர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள் கொண்டனர். தொல்காப்பியம்
உரையாசிரியர்கள் வேணாட்டையும் புனல்நாட்டையும் நீக்கி, பொங்கர்நாடு ஒளிநாடு
என்பனவற்றைக்கொணடனர். உரையாசிரியர் பொதுங்கர்நாடு என்று பொங்கர் நாட்டைக்
குறிப்பிடுகின்றார்.

இவ்வாசிரியர் தமிழ்ஒழி பதினேழ் நிலங்கள் பற்றி மயிலைநாதர்
உரைத்தனவற்றையே தாமும் உரைத்தார். மயிலைநாதர் மேலும்,
 

 ‘கன்னித் தென்கரைக் கடற்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலுங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இருநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையின் சொல்நயம் உடையவும்.
என்றார் அகத்தியனார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

இனி, நச்சினார்க்கினியர் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்து பன்னிரு நிலத்தையும் புறம்
சூழ்ந்த பன்னிருநிலமாவன சிங்களமும் பழந்தீவும் கொல்லமும் கூபமும் கொங்கணமும்
துளுவும் குடகமும் கருநடமும் கூடமும் வடுகும் தெலுங்கும்