சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இலக்கண விளக்கம்-சொல்லதிகாரம்59

கலிங்கமும் ஆம் என்று கூறுவார். தெய்வச்சிலையாரும் இக்கருத்தினரே.

இவ்வாசிரியர் கொடுந்தமிழ்நாட்டுச் சொற்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டுக்கள்
பலவும் மயிலைநாதர் உரையை ஒட்டியனவே. அவற்றுள், அருவாநாட்டார்
செறுவைச்செய் என்றல் நச்சினார்க்கினியர் கூறியதாகும். பன்றி நாட்டார் செறுவைச்செய்
என்பர் என்பது மயிலைநாதர் கூற்று.
 

 நாடுகளின் பெயர்

தென்பாண்டிநாடு
குட்டநாடு
குடநாடு
கற்காநாடு
வேணாடு
பூழிநாடு
பன்றிநாடு
அருவாநாடு
அருவாவட தலைநாடு
சீதநாடு

மலைநாடு
புனல்நாடு
குடகம்
சிங்களம்
கருநடம்


வடுகநாடு
தெலுங்கநாடு
துளு
இயற்சொல்

எருமை ஆ; சோறு
தாய், ஞாய்
தந்தை
வஞ்சர்
தோட்டம்
நாய், சிறுகுளம்
செறு
செறு, சிறுகுளம்
குறுணி, புளி
ஏடா, தோழன்;
தோழி, தம்மாமி.
தோழி
தாய்
பிள்ளை
ஐயோ
கைப்பற்ற
விளித்தல்
பனிக்க
சொல்
பசு, எருது
மாமரம்
 
திசைச்சொல்

பெற்றம், சொன்றி
தள்ளை, ஞெள்ளை
அச்சன்
கையர்
கிழார்
ஞமலி, பாழி
செய்
செய், கேணி
குட்டை, எகினம்
எலுவன், இகுளை,
தந்துவை
இகுளை
ஆய்
குடா
அந்தோ
சிக்க
கரைதல்
குளிர
செப்பு
பாண்டில்
கொக்கு