தமிழ்ஒழி பதினேழ் நிலத்து மொழிகளையும் கொடுந் தமிழ்நாட்டு மொழியோடு ஒப்பத் திசைச்சொல் எனக் கொண்டார். ஆசிரியர் தொல்காப்பியனார் அவ்வாறு கொள்ளாமையானும், உரையாசிரியர் சேனாவரையர் கூறாமையானும், வடசொல் போல ஏனை நிலத்துச்சொற்கள் சான்றோர் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வாராமையானும் சில சொற்கள் இக்காலத்து வரினும் இலக்கணமுறை அன்மையானும் அவை தமிழ்க்குரிய திசைச்சொல் ஆக என மறுக்க. |