இது மேல் வடசொல் என்றதன் இலக்கணம் கூறுகின்றது. இ-ள்: தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவாகிய எழுத்தானும் ஆரியத்திற்கே உரித்தாகிய எழுத்தானும் அவ்விரண்டனானும் ஆக்கப்பட்டு, ஈண்டைக்கு ஏற்ற பெற்றியாய்த் திரிந்து பொருந்துவன வடசொல்லாம் என்றவாறு. பொது எழுத்தாவன அச்சு என்று வழங்கும் உயிர் பதினானுள் இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் ஒழித்து ஒழிந்த பத்தும். அல் என்று வழங்கும் மெய் முப்பத்தேழனுள் கசடதப என்னும் ஐந்து வருக்கங்களின் இடைக்கண் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்படும் பதினைந்தும் ஒழித்து ஒழிந்த அவ்வருக்கங்களின் முதலினும் ஈற்றினும்நின்ற பத்தும் யரலவள என்னும் ஐந்தும் ஆகிய இருபத்தைந்தும் ஆம். சிறப்பெழுத்து ஆவன உயிருள் ஒழிந்த ஆறும். ஐ வருக்கங் |