சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

62 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

களின் ஒழிந்த பதினைந்தும், முப்பதாம் மெய் முதல் நான்கும், முப்பத்தைந்தாம் மெய்முதல் மூன்றும் ஆகிய இருபத்தெட்டும் ஆம்.

வரலாறு: வாரி- மேரு- குங்குமம்- மணி- மானம்- மீனம்- வீரம்- வேணு- காரணம்-காரியம்- நிமித்தம்- காரகம் என்றாற்போல்வன அடிப்பட்ட சான்றோர் செய்யுட்கண் இயைந்து வந்தன, கமலம்- அமலம்-மூலம்-கோபம்-ஞானம்- ஞேயம்- தமாலம்- தாரம்- திலகம்- நாமம்- மானம்- யோனி உற்பலம் என்றாற்போல்வன அவரொடு ஒரு தன்மையாற் செய்யுட்கண் இயைந்து வந்தன. இவ்விரு வகைமொழியும் பொதுஎழுத்தான் இயன்றன.
 
  
 
‘அரமியம் வியலகத் தியம்பும்’
‘தசநான்கு எய்திய பணைமருள் நோன்தாள்.’

‘வாதிகை அன்ன சுவைக்கதிர் இறைஞ்சி.’ மலைபடு.

‘கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை’

‘பேதை அல்லை மேதைஅம் குறுமகள்.’
‘தைப்பு அமை சருமத்து.’
அகநா, 124
நெடுநல்.115

112

புறநா. 378

அகநா.7

 
என்றாற் போல்வன அடிப்பட்ட சான்றோர் செய்யுட்கண் இயைந்து வந்தன.

தந்திரம்- சூத்திரம்- விருத்தி- அருத்தாபத்தி- உத்தி- என்றால் போல்வன நூலுள்
இயைந்து வந்தன.

பங்கயம்- இடபம்- விசயம்- இருடி- கனம்- மேகம்- பந்தமயானம்- விடம்- துங்கம்-
பலம்- பாரம்- சர்ச்சரை- சாதி- சித்திசாதனம்- அயன்- அரி- அரன்- அருகன்- ஆரம்-
சிங்கம்- மோகம்- தாபம்- பக்கம்- சூலம்- சதம்- போதகம்- போதம்- சத்தம்- சலம்-
போகம்- யோகம்- வந்தனை- வேலை- சாலை- மாலை- உவமைவனிதை- புரி மேதினி-
குமரி- நதி- அரங்கம்- இயக்கன்- உலோபம்