சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

580 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

என்ற தொடரில் ‘அதனால்’ என்பது உருபு ஏற்ற சுட்டுப் பெயர். அச்சொல்
ஒருபெயரையே சுட்டி வரும். ஆயின் ‘அதனால்’ என்ற இடைச்சொல் ஒரு தொடரையே
சுட்டி வரும் என்பது பொருள் பற்றிய வேற்றுமை ஆதலும் அறிக.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்குஒருங்கு இயலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.’

‘முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.’
‘சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்.’
முழுதும்
‘இயற்பெயர் சுட்டுப் பெயரும் இரண்டும்
வினைகொளற்கு ஒருங்கியல் காலத் தானே
சுட்டுப் பெயரை முற்படக் கிளவார்.’
‘முற்படக் கூறல் யாப்பினுள் உரித்தே.’
‘சுட்டுமுதல் ஆகிய காரணப் பெயரும்
முற்படக் கிளத்தல் முறையன்று ஆகும்.’
தொல்.சொல்.38

39

40
நன்.394


மு.வீ.ஒ.70
71

72


சிறப்புப்பெயரொடு இயற்பெயர் தொடரும்முறை
 

317. திணைநிலம் சாதி குடியே உடைமை
தவம்தொழில் கல்வி சினைகுணம் சிறப்போடு
இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே.

 

இஃது ஒருபொருள் உணர்த்தும் இருபெயர் வழுவற்க எனக் காக்கின்றது.