சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-23581

இ-ள்: திணைப்பெயர் முதலிய பெயர்வகை பதினொன்றிடனே இயற்பெயர்
பொருந்தி வருமாயின் அஃது ஏனைப் பெயர்களுக்குப்பின்னே வருதல் மரபு என்றவாறு.

ஈண்டுச் ‘சிறப்பு’ என்றது மன்னர் முதலாயினாரால் கூறும் வரிசை.

வரலாறு:

  குன்றவன் கொற்றன்
அருவாளன் அழகன்
பார்ப்பான் பாராயணன்
சேரமான் சேரலாதன்
ஊர்கிழான் ஓணன்
முனிவன் அகத்தியன்
நாடகி நம்பி
தெய்வப்புலவன் திருவள்ளுவன்
குருடன் கொற்றன்
மெய்யன் மேல்திசைநின்றான்
ஏனாதி நல்லுதடன்

 
எனவரும். பிறவும் அன்ன.

இங்ஙனம் வருதல், ஏற்புழிக்கோடலான், ஒன்றனை ஒன்று கொள்ளாது, இரண்டும்
வந்தான்- சென்றான் என்றாற் போல வினைக்கு ஒருங்கு இயலும் காலத்து என்க-

திருவீர ஆசிரியன், மாந்தக்கொங்கேனாதி என இயற்பெயர் முன்வந்தனவால்
எனின் அவை தொகைச்சொல் ஆதலான் அவற்றின்கண்ணது அன்று இவ்வாராய்ச்சி
என்க. ஆண்டு இயற்பெயர் முன்நிற்றல் பண்புத்தொகை ஆராய்ச்சிக்கண் பெறுதும். 23
 

விளக்கம்
 

இந்நூற்பா- தொல்காப்பியச் சொற்படல 41ஆம் நூற்பாவினையும், அதன் சேனாவரையர் உரையினையும் கொண்டு நன்னூல் நூற்பாவில் சில சொற்கள் இணைத்து அமைக்கப்பட்டது.