இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளும்வழி எதனையும் முற்கூறலாம். ஆனால் இரண்டும் வேறு ஒரு வினை கோடற்கண் சிறப்புப்பெயரை முன்னும் இயற்பெயரைப் பின்னும் கூறலே முறை. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கண் இம்முறை மாறியும் வரலாம். அது புதியது புகுதலாம். குன்றவன்- திணைப்பெயர். அருவாளன்- நிலன், பார்ப்பான்- சாதி, சேரமான்- குடி, ஊர்கிழான்- உடைமை முனிவன்- தவம், நாடகி- தொழில் (நாடகம் ஆடுவோன்), புலவன்- கல்வி, குருடன்- சினை, மெய்யன்- குணம். |