இயற்பெயர்; இளங்கண்ணன் என்பது சாத்தனுடைய தந்தை பெயர்; செயிற்றியன் என்பது செயிற்றியம் என்ற நூலில் சாத்தன் வல்லவன் ஆதலால் பெற்ற சிறப்புப் பெயர்; பேரூர்கிழான் என்பது அவன் உடைமை பற்றி வந்த பெயர்; ஆசிரியன் என்பது தொழில்பற்றி வந்த பெயர். இவ்வாறு தொழில் உடைமை சிறப்புப் பற்றிய பெயர்களும் தந்தையது பெயரும் சாத்தன் பெயரொடு இணைய சாத்தன், ஆசிரியன்பேரூர்கிழான்செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் எனப்பட்டன்.எந்தை வருக முதலிய நான்கும் காதல் பற்றி ஒருவனையே பலவகையாக விளித்து அவனுக்கு ஒரு தொழிலே கூறுதலின், வழுவமைதியேயாம் என்பது உரையாசிரியர் பலருக்கும் உடன்பாடு; ஆனால் நேமிநாத உரையாசிரியர் (சொல்.13) “செக்கினுள் எள்பெய்து ஆட்டுவார் இல்லாமோட்டு முதுகிழவி மன்றத்து இருந்த வன்திறல் இளைஞரைச் சென்று கைப்பற்றி ‘எந்தை வருக, எம்மான் வருக, மைந்தன் வருக, மணாளன் வருக’ என்றால் இது வழு ஆகற்பாலதோ எனின், அறியாது சொன்னாய்; ஒரு பொருள்மேல் பல பெயர் அல்லாமையால் ஆகாது” என்பதும் நோக்குக. |